கெஜ்ரிவால் ஜாமீன் ஹரியானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ன சொல்கிறது காங்கிரஸ்?

Mahendran

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (16:41 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அழைத்துள்ள நிலையில் அவரது ஜாமீன் ஹரியான தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
 
இந்த நிலையில் டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதான கெஜ்ரிவால்  கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்த நிலையில்  தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவரது ஜாமீன் ஹரியானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் கூறிய போது ஜாமீன், தேர்தல் ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இது நீதிமன்றத்தின் நடைமுறை. அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு இந்திய குடிமகனைப் போலவே அவர் நீதிமன்றம் சென்றார், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கும் ஹரியானா தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைம் இது நிச்சயம் ஹரியானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்