மேலும் 43 செல்போன் செயலிகளுக்குத் தடை ...மத்திய அரசு அதிரடி
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:26 IST)
சமீபத்தில்,கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனா – இந்தியா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சீனாவின் மொபைல் 50 க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் சீன பொருட்களுக்கான தடையும் தொடர்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
டிக்டாக், பப்கி உள்ள்டிட்ட சீனாவில் செயலிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறி, AliExpress, Alipay cashier, WeTv உள்ளிட்ட மேலும் 43 செயலிகளுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது.