750 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.1064: விரக்தியில் விவசாயி செய்த காரியம்...
திங்கள், 3 டிசம்பர் 2018 (21:04 IST)
இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50% மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவை சேர்ந்த விவசாயி வெங்காயத்தின் விலை குறைந்ததால் வேதனை அடைந்து பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.
கடந்த வாரம் விவசாயின் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை மொத்த விற்பனை சந்தைக்கு எடுத்து சென்ற போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.1க்கு கொள்முதல் செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு பின்னர் 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1064 கிடைத்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ1.40. இதனால் விவசாயி மிகவும் விரக்தி அடைந்தார்.
இதனால், நான்கு மாத வியர்வை சிந்திய உழைப்புக்கு கிடைத்த விலை தமக்கு வேதனை அளிப்பதாகவும், எனவே இப்பணத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் இதற்கு மணி ஆர்டர் கமிஷனுக்கு ரூ.54 கூடுதலாக செலவு செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.