வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள் பாலியல் அடிமைகள் ஆக்கப்படுகின்றனர் – அமைச்சர் தகவல்

புதன், 25 மே 2016 (14:36 IST)
வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள் விலை வைத்து விற்கப்படுவதாக பல்லே ரகுநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
 

 
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது போன்று அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பலர் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.
 
மேலும் அங்கு பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் விற்பனை செய்யப்பட்டு கடும் சித்தரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
 
பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது.
 
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறது. பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளதாகவும் இவர்களை தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.
 
இதுபோன்று வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்