திரையரங்க டிக்கெட்டுகளை இனி அரசே விற்கும்! – ஆந்திர அரசு அதிரடி!

வியாழன், 30 டிசம்பர் 2021 (12:52 IST)
திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளை இனி அரசே நேரடியாக விற்கும் என்ற ஆந்திர அரசின் புதிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா திரைப்படங்களுக்கான மிகப்பெரும் மார்க்கெட்டாக இருந்து வரும் நிலையில் ஹாலிவுட் படங்கள் தொடர்ந்து இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின்றன. தற்போது இந்திய படங்களுமே மொத்த இந்திய சந்தையை ஈர்க்கும் விதமாக பேன் இந்தியா படங்களாக உருவாக தொடங்கியுள்ளன. ஆனால் திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை அந்தந்த திரையரங்குகளே முடிவு செய்வதால் சில திரையரங்குகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன.

ஆந்திராவிலும் பல பகுதிகளில் திரையரங்குகளில் பல்வேறு விலைகளில் டிக்கெட் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் இனி ஆந்திராவில் அனைத்து திரையரங்குகளுக்கான டிக்கெட்டையும் அரசே விற்பனை செய்யும் என்றும், திரையரங்குகள் டிக்கெட்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் தரப்பில் வரவேற்பும், திரையரங்குகள் தரப்பில் கண்டனமும் இருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்