அதே சமயம் சந்திரபாபு நாயுடுவை சும்மா விடுவதாய் இல்லை. நேற்று, ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடித்து தள்ளினார்.
அந்தவகையில் அடுத்து, தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆம், மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெகன் மோகன் ரெட்டி.
இதோடு நிறுத்தாமல், சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 30 திட்டங்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்க அமைச்சரவை துணைக்குழுவை ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.