விவசாயி வீட்டில் அமர்ந்து சாப்பிட்ட அமித்ஷா ...வைரலாகும் புகைப்படம்

சனி, 19 டிசம்பர் 2020 (16:05 IST)
இன்றுமேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்ற அமித்ஷா உணவு சாப்பிட்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் தொடர்ந்து 23 வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளிடம் ரூ.50 லட்சம்  லட்சம் கேட்டு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து இன்று  24 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் வேளான் பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையைக் குறைக்க முடியாது என்ரு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்தாண்டுமேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், ஆளும் திரிணாமுள் காங்கிரஸுக்கு எதிராக பாஜக வளர்ந்து வரும் நிலையில் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று அங்குள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்ச் சென்று உணவு சாப்பிட்டார்.அவருடம் அமித்ஷா, பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோருன் உடன் இருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்