எவனோ வேண்டாதவன் பாத்த வேலை இது! – அமித்ஷா ரிட்டர்ன்ஸ்!

ஞாயிறு, 10 மே 2020 (08:49 IST)
அமித்ஷா நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக வதந்திகள் வெளியான நிலையில் தான் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அமித்ஷா.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக ஊரடங்கும், அதை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி அடிக்கடி ஊடகங்கள் வழியாக மக்களுடன் பேசி வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி பரபரப்புகளை ஏற்படுத்தி வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.

அவரது செயல்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் தெரியாத நிலையில் சிலர் அமித்ஷா நோய்வாய்ப்பட்டு கிடப்பதாகவும், அவர் நலமுடன் திரும்ப பிரார்த்திக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். சகட்டு மேனிக்கு பரவிய அந்த வதந்திகளை நம்பி பாஜகவினர் பலர் கூட அவரது ஆரோக்கியத்திற்காக வேண்டி கொண்டனர்.

இந்த வதந்தி குறித்து அமித்ஷா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறேன். அதனால் இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரவுகிறது என தெரிந்தும் நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். இதன்மூலம் நான் இறக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் சிறிது நாட்கள் இன்பத்தை அனுபவித்து கொள்ளட்டும் என நினைத்தேன். அவர்கள் மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை. கட்சி தொண்டர்கள் இதுகுறித்து கவலையடைந்திருப்பதாக அறிந்ததால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் எந்த நோயுமின்றி பூரண நலத்துடன் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்