பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு: ஏன் தெரியுமா?

சனி, 17 செப்டம்பர் 2022 (12:47 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் நேரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி போரை நிறுத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க ஊடகங்கள் இந்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
இந்தியா உள்பட 8 நாடுகள் கலந்துகொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை தனிமையில் சந்தித்த பிரதமர் மோடி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதனை புதினும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது
 
 இந்த நிலையில் உக்ரேன் போரை நிறுத்த இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் தலைவர் புதினுடன் இப்போது இது போருக்கான காலம் அல்ல என்று கூறியது மிகவும் ஆரோக்கியமானது என்று தி வாஷிங்டன் போஸ்ட் உள்பட அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்