தற்போது அவர் பேசும் நிலையில் இல்லை என்றும் அவரது உடல் பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது கைப்பையில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தபோது தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் கார்டு, அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.
மேலும் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருப்பதாகவும் அவர் பல வருடங்களாக இந்தியாவில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சையில் ஓரளவு அவர் தேறியவுடன் தான் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.