ஆர்டர் செய்தது வாட்டர் ஹீட்டர்: வந்ததோ மேகி பாக்கெட்: அமேசானில் குழப்பம்
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:30 IST)
வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த ஒருவருக்கு மேகி பாக்கெட் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் வலைதளத்தில் வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்து பணமும் செலுத்தி இருந்தார். ஆனால் அவருக்கு மேகி நூடுல் பாக்ஸ் அனுப்பி இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
அவர் வாட்டர் ஹீட்டருக்காக அவர் 7,500 ரூபாய் செலுத்தி இருந்த நிலையில் ஒரு சில நூறு ரூபாய் மதிப்புள்ள மேகி பாக்கெட் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அமேசான் நிறுவனத்தில் புகார் அளித்தார்
மேலும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளருக்கு டேக் செய்து டுவிட்டரிலும் இதனை பதிவு செய்தார். இதனையடுத்து உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மையம் அவரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு உடனடியாக வாட்டர் ஹீட்டர் அனுப்ப ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளது