உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம்: இந்தியாவில் திறப்பு

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (14:13 IST)
உலகிலேயே மிகப்பெரிய அமேசான் நிறுவனத்தின் கட்டிடம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்கும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமேசான், இந்தியாவில் மட்டும் 50,000 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தி வருகிறது.

இந்நிலையில் அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட பிரம்மாணட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது.

தற்போது கட்டிட பணிகள் முடிவடைந்து நேற்று முந்தினம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடம் தான் உலகிலேயே பிரம்மாண்டமான அமேசான் நிறுவனத்தின் கட்டிடம் என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள அமேசான் தலைமையிடத்தை விடவும், ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட கட்டிடம் தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்