என்னா ட்ரிக்கு? இப்படியும் வீட்டுக்கு போகலாமோ? – ஸொமாட்டோவை டாக்ஸியாக பயன்படுத்திய இளைஞர்

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:28 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவில் டாக்சி கிடைக்காமல் மாட்டிக்கொண்ட போது ஸொமாட்டோவை பயன்படுத்தி நூதன முறையில் வீட்டுக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒபேஷ் கொமிரிசெட்டி. இவர் தனது அலுவலக பணிகள் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியே வந்துள்ளார். வீட்டிற்கு செல்ல ஆட்டோவை தேடியிருக்கிறார். அந்த சமயம் ஆட்டோ எதுவும் இல்லை. உடனடியாக தனது போனிலிருந்து ஊபரில் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுக்கப்பார்த்திருக்கிறார். வாடகை 300 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். இவரிடம் அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருந்திருக்கிறார்.

சட்டென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே தனது மொபைலில் அருகில் உள்ள உணவகம் எது என்று பார்த்திருக்கிறார். தோசா பந்தி என்ற உணவகம் இருந்திருக்கிறது. ஸொமாட்டோ மூலம் அந்த உணவகத்தில் ஒரு முட்டை தோசை ஆர்டர் செய்திருக்கிறார். பிறகு அந்த உணவகம் அருகிலேயே காத்திருந்திருக்கிறார்.

அவருடைய ஆர்டரை வாங்க ஸொமாட்டோ டெலிவரி பாய் வந்திருக்கிறார். பார்சலை டெலிவரி செய்ய கிளம்பிய அவரை பிடித்து “நான்தான் அந்த உணவை ஆர்டர் செய்தேன். எனது வீட்டுக்குதன் நீங்கள் போகிறீர்கள். அதனால் என்னையும் கூட்டி செல்லுங்கள் என கூறியிருக்கிறார்”. டெலிவரி பாயும் அவரை அழைத்துகொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு தனது சேவைக்கு 5 ஸ்டார் வழங்குமாறு கேட்டிருக்கிறார். இவரும் சரி என்று சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை ஒபேஷ் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஸொமாட்டோவையும் இணைத்து நன்றி கூறியிருக்கிறார். அதற்கு ஸொமாட்டோவின் வாடிக்கையாளர் சேவைமையம் “நவீன பிரச்சினைகளுக்கு நவீன தீர்வுகளும் கிடைத்து விடுகின்றன” என்று கூறி ஜீனியஸ் என்று அவரை பாராட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்