3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மாநில அரசுகளுக்கு அனுமதி ...

திங்கள், 23 மார்ச் 2020 (20:43 IST)
3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மாநில அரசுகளுக்கு அனுமதி ...

கொரொனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 192 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகளில் லாக் அவுட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,297 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,090 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்திற்கு அதிகமனோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்திய உணவுக்கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற அனுமதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படாமலிருக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்