குடியரசு தலைவர் பெற்ற வாக்கு சதவீதம்… (1950 – 2022)!!

வெள்ளி, 22 ஜூலை 2022 (10:23 IST)
இதுவரை நடந்த குடியரசு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீத பட்டியல் விவரம் பின்வருமாறு…


இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடந்த குடியரசு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீத பட்டியல் விவரம் இதோ…

1950 – டாக்டர் ராஜேந்திர பிரசாத் – போட்டியின்றி தேர்வு
1962 – சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் – 98.2%
1967 – ஜாகீர் உசேன் – 56.2%
1969 – வி.வி. கிரி – 50.9%
1974 – பக்ருதின் அலி அகமது – 78.9%
1977 – நீலம் சஞ்சீவி ரெட்டி – போட்டியின்றி தேர்வு
1982 – ஜெயில் சிங் – 72.7%
1987 – ரா வெங்கட்ராமன் – 72.3%
1992 – சங்கர் தயாள் சர்மா – 65.9%
1997 – கே.ஆர். நாராயணன் – 95%
2002 – ஏ.பி.ஜே. அப்துல் கலாம் – 89.6%
2007 – பிரதீபா பட்டீல் – 65.8%
2012 – பிரணப் முக்கர்ஜி – 69.3%
2017 – ராம் நாத் கோவிந்த் – 65.7%
2022 - திரவுபதி முர்மு – 60.03%

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்