கொரோனா வைரஸ் எதிரொலியால் அனைத்து பள்ளிகளும் மூடல் ! டெல்லி அரசு

வியாழன், 12 மார்ச் 2020 (18:27 IST)
கொரோனா எதிரொலியால் அனைத்து பள்ளிகளும் மூடல் ! டெல்லி அரசு

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
 
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி சுமார் 60  பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000 கும் மேல் உள்ளதாக என சீன அரசு அறிவித்துள்ளது.
 
ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு, சமீபத்தில்,  27 நாட்கள் அதாவது மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இன்று டெல்லி அரசு, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக் கூடிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும், ர்கொரோனா வைரஸ் எதிரொலியால், டெல்லில் உள்ள அனைத்து,  தேர்வு நடைபெறாத பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்