இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, ஓய்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து வரும் சூழலில், மூன்றாம் அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மே 12ல் அனுமதி அளித்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் க்ளேரியா “குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிலைகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதத்தில் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.