அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை !

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:53 IST)
அகமதாபாத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2008ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
இந்த தீர்ப்பில் அகமதாபாத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முப்பத்தி எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்