பிராமணர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறிய மந்திரியின் பதவி பறிப்பு

சனி, 23 டிசம்பர் 2017 (05:43 IST)
கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல்வாதிகள் முதல் சமூக போராளிகள் வரை பிராமணர்களை விமர்சனம் செய்து வரும் நிலையில்  ஒடிசா மாநில விவசாயத்துறை மந்திரி பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதால் தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.

ஒடிசாவின் விவசாயத்துறை மந்திரி தாமோதர் ரவுட் என்பவர் சமீபத்தில் மல்காங்கிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, 'எந்த சூழ்நிலையிலும் பழங்குடியின மக்கள் பிச்சை எடுக்க மாட்டர்கள் என்றும், ஆனால் தேவைப்பட்டால் பிராமணர்கள் பிச்சை எடுக்கக்கூட தயங்க மாட்டார்கள் என்றும் கூறினார்

அமைச்சர் தாமோதரின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த கருத்துக்கு பிராமணர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து விவசாயத்துறை மந்திரி பதவியில் இருந்து தாமோதர் ரவுட்-டை பதவிநீக்கம் செய்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனல் ஒடிசா அமைச்சரவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்