நான் குஜராத் முதலமைச்சரா? திட்டவட்டமாக மறுத்த ஸ்மிருதி இரானி!!

புதன், 20 டிசம்பர் 2017 (21:35 IST)
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக குஜராத் சட்டமன்றத்தில் அமர உள்ளது. 
 
எனவே விஜய் ரூபானிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை சமாளிக்கும் திறமையுடைய வேறு நபரை முதல்வராக நியமிக்கலாம் என பாஜக மேலிடம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை நியமிக்கலாம் என பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. 
 
ஆனால், ஸ்மிரி இராணி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து ஸ்மிரிதி இராணி இவை அனைத்தும் வதந்தி என தெரிவித்துள்ளார். குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த வாரம் குஜராத் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்