மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு? நானா படோலே கணிப்பு!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:21 IST)
மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று நானா படோலே கணிப்பு. 

 
மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடப்பதால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அங்கு பல நாட்கள் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் வெடிக்கின்றன.
 
இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய மம்தா ‘மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த போது பிரதமரோ உள்துறை அமைச்சரோ வரவில்லை. ஆனால் இப்போது தேர்தல் இருப்பதால் அவர்கள் வெளியாட்களைக் கொண்டுவந்து இங்கே கொரோனா வைரஸ் பரவலை அதிகமாக்கியுள்ளனர் என தெரிவித்தார். 
 
இதனிடையே, மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக சாடியுள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலே, மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்