தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் உயர்ந்தது பேருந்து கட்டணம்

புதன், 14 பிப்ரவரி 2018 (17:59 IST)
தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை எளிய பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து பின்னர் சற்று குறைக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து அண்டை மாநிலமான கேரளாவிலும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது. இன்று நடைபெற்ற கேரள அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இனிமேல் கேரளாவில்  குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் சாதாரண பஸ்களில் ரூ.7-லிருந்து 8 ஆகவும், அதிவேகப் பேருந்துகளில் கட்டணம் ரூ.10-லிருந்து 11 ஆகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 20-லிருந்து 22 ஆகவும், ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.44 ஆகவும், வால்வோ ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்தபோது கடும் கண்டனம் தெரிவித்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தான் ஆளும் மாநிலத்திலேயே கட்டணத்தை உயர்த்தியிருப்பதை கண்டும் காணாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்