ரூ.40 வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

புதன், 7 ஜூன் 2023 (07:39 IST)
பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் ஆவணப்படம் பிபிசி வெளியிட்ட நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். பிபிசி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் காட்டிய நிலையில் தற்போது வரி ஏய்ப்பை பிபிசி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒட்டுக் கொண்டு உள்ளதாக மத்திய வருமானவரித்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் உள்பட பிரதமர் மோடிக்கு எதிரான ஆவண படத்தை பிபிசி நிறுவனம் பதிவு செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வருமானவரித்துறை அதிரடியாக பிபிசி நிறுவனத்தில் சோதனை நடத்தது 
 
60 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பிபிசி நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரியை குறைத்து செலுத்தியதை பிபிசி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மீதமுள்ள வரியை செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்