ரூ.200 கோடி மோசடி: பிரபல நடிகை காதலருடன் கைது!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:20 IST)
ரூ.200 கோடி மோசடி: பிரபல நடிகை காதலருடன் கைது!
ரூ.200  கோடி மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல மருந்து நிறுவன முன்னாள் அதிபரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுடைய கூட்டாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
நடிகை லீனா மரியா பால் காதலர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதாக டிடிடி வி தினகரனிடம் ரூபாய் 50 கோடி மோசடி செய்த புகாரில் ஏற்கனவே சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரபல மருந்து நிறுவன முன்னாள் அதிபரின் மனைவியுடன் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை லினா, கார்த்தி நடித்த ‘பிரியாணி’  படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்