ஆன்லைனில் தங்கு தடையின்றி ஆசிட் கிடைப்பதால் குற்றங்கள் பெருகி வருகிறது என்றும் குறிப்பாக பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசிய குற்றத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஆன்லைனில் ஆசிட் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைனில் தங்கு தடை இன்றி ஆசிட் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது