பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநிலத்தின் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிஏபி சவுக் பகுதியை நெருங்கியபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த கார் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.