அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் - நீதிபதி

SInoj

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (16:10 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு  வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமீபத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது. இது நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக இந்தியா கூட்டணியினர் கடும் கண்டனம் கூறி வருகின்றனர்.
 
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன் கைதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும், ஜாமீன் வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வாசித்து வருகிறது.
 
அதில்,  டெல்லி மதுபான கொள்கை  உருவாக்கத்தில் மதுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருப்பது தெரிய வருகிறது என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததும், சிறையில் அடைத்ததும் சட்டவிரோதம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்