இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளதாவது: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களைக் கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளிட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.