ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: கால அவகாசம் நீட்டிப்பு..!

புதன், 22 மார்ச் 2023 (09:40 IST)
ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பதும் இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதன் தெரிந்தது. இதனை அடுத்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இந்த கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. 
 
ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்