இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தங்கிய எம்.எல்.ஏக்கள்: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

வெள்ளி, 19 ஜூலை 2019 (06:35 IST)
கர்நாடக சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி மீதான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையை இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்
 
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்ததால் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை என கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடத்துமாறு பாஜகவினர் ஆளுனரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்
 
இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் குமாரசாமி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் பாஜக எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் சட்டத்திலேயே தங்கியதால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்