ஸ்மார்ட் போனுக்கு பதிலாக பார்சலில் கல்.! வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

Senthil Velan

சனி, 30 மார்ச் 2024 (11:39 IST)
பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 22,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிளிப்கார்ட் நிறுவனம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் பகுதியில் உள்ள ஒருவர் ரூ. 22,000 மதிப்புள்ள Infinix Zero 30 5G என்னும் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் செயலியில் ஆர்டர் செய்துள்ளார்.  
அதே நாளில் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
 
அந்த பார்சலில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள்  இருந்ததுள்ளது.  பின்னர், அந்த நபர் ஆர்டரை  திருப்பித் தர முடிவு செய்தார்.  ஆனால் நிறுவனம் அவரது கோரிக்கையை நிராகரித்தது
 
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக,  அந்த வாடிக்கையாளர் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.  அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்த நிலையில்,  பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு தனது மன்னிப்பை தெரிவித்துள்ளது.

ALSO READ: பறிபோன ஐ.டி. வேலை.! லேப்டாப்கள் திருட்டு..! வசமாக சிக்கிய பெண்..!!

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததைத் தவிர வேறு பொருளை மாற்றி தருவதை ஒருபோதும் விரும்ப மாட்டோம் என்றும்  இந்த சம்பவம் குறித்து மிகவும் வருந்துகிறோம் என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் ஆர்டர் விவரங்களை தெரிவிக்குமாறு பிளிப்கார்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்