முதலமைச்சரே எப்போ ராஜினாமா செய்யப்போறீங்கன்னு கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்

புதன், 20 ஜூன் 2018 (07:28 IST)
போலீஸ் அதிகாரி ஒருவர் முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொன்னதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். குமாரசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் தற்பொழுதுவரை அவர் இதுகுறித்து எதுவும் பேசாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் உப்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அருண் டோலின் தனது முகநூல் பக்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி எப்பொழுது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறை உயரதிகாரி, முதலமைச்சரை விமர்சித்து பேசியதற்காக அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு டோலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்