கேரள உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நோட்டீஸ்: என்ன காரணம்?

சனி, 7 நவம்பர் 2020 (10:41 IST)
கேரள உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நோட்டீஸ்
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சுங்கத் துறை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜெலீலுடன் சுவப்னா சுரேஷ், நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டால் அம்மாநில எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்தே சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ஜெலீலிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்