குஜராத் மாநிலத்தில் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த புதிய பாலம் ... மக்கள் அதிர்ச்சி

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:39 IST)
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, திறப்பு விழாவிற்கு முன்பே ஒரு புதிய பாடல் இடிந்து விழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மா நிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுத்தில், தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் சமீபத்தில், ஒரு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு இதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், விரைவில் இதற்கான திறப்பு விழா நடத்தப்பட இருந்தது.

இந்த நிலையில் நேற்று, இந்த மேம்பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலான நிலையில், உயிர் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மா நிலத்தில் அதுவும் பாஜக ஆட்சியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj
 

गुजरात चुनाव से पहले नरेंद्र मोदी आनंद जिले के बोरसद क्रोस रोड पर बन रहें इस पुल का फीता काटनेवाले थे पर पुल ने आत्महत्या कर ली..! #DoubleCorruptGovt#BharatJodoYatra pic.twitter.com/wlTCQDJruc

— Karouli Congress Sevadal (@SevadalKRO) September 29, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்