ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்

புதன், 4 ஜூலை 2018 (10:42 IST)
ஜார்கண்டில் நபர் ஒருவர் பள்ளி ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்ரா ஹெஜா(30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து  வந்தார்.
 
இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவன், ஆசிரியை சுக்ராவை நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கிருந்தவர்கள் அவனை பிடிக்க முற்பட்டபோது அவன் வைத்திருந்த கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளான். பின் சுக்ராவை அங்கிருந்து இழுத்துச் சென்று அவரது தலையை துண்டித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவனை கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாத அவன் ஆசிரியையின் தலையோடு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளான்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தலைமறைவாக இருந்த அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் அவன் பெயர் ஹரி என்றும் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்தது. இருந்தபோதிலும் எதனால் அவன் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை இழுத்துச் சென்று கொன்றான் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்