இதற்காக பல கட்சிகள் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதன்படி, இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கைகளில் ஐக்கிய ஜனதா கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஈடுபட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.