டெல்லியை சேர்ந்தவன் ஹர்கேஷ் குமார். இவரது மனைவி கவிதா குமாரி. இவர்கள் இருவருக்கும் 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஹர்கேஷ் குமார் மதுப்பழக்கம் உடையவன். இதனால் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. கோபமடைந்த கவிதா, தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த கொடூரன் ஹர்கேஷ் குமார், குடிபோதையில் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்று தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளான். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போகவே கோபமடைந்த ஹர்கேஷ் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.