அதானி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் அபராதம்!

Prasanth Karthick

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:18 IST)

மகாராஷ்டிராவில் மின்சார உரிமை அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதன் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

 

 

மகாராஷ்டிராவில் புதுப்பிக்கத்தக்க மற்றும் அனல் மின்சாரம் வழங்குவதற்கான டெண்டரில் அதானி குழுமம் அதன் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை எதிர்த்து ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அதில் அதானி நிறுவனத்திற்கு மின்விநியோக ஒப்பந்தம் வழங்கியது நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இதில் மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
 

ALSO READ: இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதில் உள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவற்றை ஏற்க மறுத்தனர். இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பல நல்ல காரியங்களை நடக்க விடாமல் செய்துவிடும் என கூறிய அவர்கள், மனுதாரர் எந்த டெண்டரிலும் பங்கேற்காத நிலையில் எந்த ஆதாரமும் இன்றி இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்