ஜெய்ப்பூர் அருகே நில அதிர்வு: ரிக்டர் அளவு எவ்வளவு தெரியுமா?

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:40 IST)
ஜெய்ப்பூர் அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் என்றும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
 
 இருப்பினும் இந்த நில அதிர்வு காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளதால். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்