உத்திரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிர் பிழைத்த கிருஷ்ண வர்மா என்ற மாணவன், டிரைவரிடம் வண்டியை நிறுத்தும்படி கூச்சலிட்டதாகவும், வேன் டிரைவர் அலட்சியமாக போன் பேசிக் கொண்டே வண்டியை இயக்கியதால், தாங்கள் கூறியதை அவர் கவனிக்கவில்லை என மாணவன் கூறினான். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.