உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (20:17 IST)
மகாராஷ்டிரம் மாநிலத்தில் உணவுடன் சேர்த்து  எருமை மாடு தாலியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சார்சி என்ற கிராமத்தில் உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த எருமை மாடு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலியை விழுங்கியது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்து  செயினை அகற்றினர்.

உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்ததால், மாடு அதை சாப்பிட்டுள்ளது. அதன்பின்னர், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து, மருத்துவர்கள்  மாட்டின் வயிற்றில் செயின் இருப்பதை உறுதி செய்து, அதை அகற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்