நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க அம்மாநில டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 77 நாட்களுக்கு பிறகு ஹீராதாஸ் என்ற முக்கிய குற்றவாளியைக் கைது செய்து, அவரது புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ''அந்தக் கும்பல் எங்கள் கிராமத்தைத் தாக்கும்போது, போலீஸும் உடனிருந்தனர். ஊரைத் தாண்டியதும் எங்களை அக்கும்பலிடம் விட்டுச் சென்றதே போலீஸார்தான்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.