போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்

திங்கள், 5 நவம்பர் 2018 (11:48 IST)
டெல்லியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
டெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் ஆதராவாளர்களுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த மனோஜ்திவாரியை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர முற்பட்டார். அப்போது மனோஜ் திவாரி அந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.
 
பாஜக தலைவர் போலீஸ் அதிகாரியை அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்