கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி.. பறந்து வந்து மீட்ட ‘சுதந்திர’ பறவை!? - கேரளாவில் ஆச்சர்ய சம்பவம்!

Prasanth Karthick

சனி, 17 ஆகஸ்ட் 2024 (10:45 IST)

கேரளாவில் சுதந்திர தினத்தன்று கம்பத்தில் பறக்காமல் சிக்கிய தேசியக் கொடியை பறவை ஒன்று வந்து விடுவித்தது போல தோன்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

இந்தியா முழுவதும் கடந்த 15ம் தேதி நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டை தொடங்கி சிறு கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிகள் வரை பல பகுதிகளிலும் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடப்படுகிறது.

 

அவ்வாறாக கேரளாவின் ஒரு பகுதியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவின் ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளியில் சுதந்திர தின விழாவிற்கு கொடி ஏற்றப்பட்டுள்ளது. கொடி சுருக்கி கட்டப்பட்டு மேலே சென்றதும் விரிந்து பறக்கத் தொடங்கும். ஆனால் அங்கு ஏற்றப்பட்ட கொடி உச்சிக்கு சென்றும் விரியாமல் சிக்கிக் கொண்டிருந்தது.

 

அப்போது திடீரென ஒரு மரத்திலிருந்து பறந்து வந்த சிறு பறவை ஒன்று சிக்கிக் கொண்டிருந்த தேசியக்கொடியை தன் அலகால் கொத்தி முடிச்சுகளை அவிழ்த்து பறக்க செய்வது போல உள்ளது. பின்னர் மீண்டும் மரங்களுக்கிடையே பறந்து சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் அது காட்சிப்பிழை என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த பறவை கொடிக்கு அருகில் வரவில்லை என்றும் கொடிக்கு பின்னால் இருந்த மரத்தில் சென்று அமர்வதுதான் கொடியை பறக்க செய்ய முயல்வது போல தெரிவதாகவும், உற்று பார்த்தால் அது நன்றாக தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

Kerala - National Flag got stuck at the top while hoisting. A bird came from nowhere and unfurled it!! ✨ pic.twitter.com/lRFR2TeShK

— Shilpa (@shilpa_cn) August 16, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்