அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

Mahendran

செவ்வாய், 7 மே 2024 (14:41 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் மனு மீது பரபரப்பு வாதம் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் டெல்லியை சிறைச்சாலையாக மாற்ற அமலாக்கத் துறை விரும்புகிறது என  கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி குற்றஞ்சாட்டிய நிலையில் இடைக்கால ஜாமின் வழங்கினால் தலைமைச் செயலகம் செல்வரா? என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
மேலும் இடைக்கால ஜாமின் அளிக்கும் பட்சத்தில் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் பணியை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகளை  ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘எந்தவொரு கோப்பிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடமாட்டார் என்ற உறுதியை அளிக்கிறேன் என்றும் உறுதியளித்தார்.
 
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் இல்லையென்றால், இடைக்கால ஜாமின் குறித்த பரிசீலனை வந்திருக்காது என தெரிவித்த நீதிபதிகள் இன்னும் சில நிமிடங்களில் இதுகுறித்து முக்கிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்