300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

வியாழன், 8 ஜூன் 2023 (21:03 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி இன்று மயக்கமடைந்த  நிலையில் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சோஹூர் அருகேயுள்ள மூங்வாலி என்ற கிராமத்தில் வீட்டின் அருகில் சிறுவர் மற்றும் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 2 வயது சிறுமி ஒருவர் எதிர்பாரா விதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்க போராடினர்.

குழந்தை ஆழ்துளை கிணற்றின் அடியில் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாக குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஆழ்துளை கிணற்றின் அருகில் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுமியை 50 அடியில் பத்திரமாக மீட்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்புத் துறையினருடன் தேசிய பேரிடன் மீட்புக் குழுவினர்  இப்பணியில் இறங்கினர்.

100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்த நிலையில், இரவு பகல் பாராமல் மீட்பு பணிமேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சுமார்  மணி நேர போராட்டத்திற்குப் பின், அக்குழந்தை மயக்கமடைந்த நிலையில், மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கடும் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்