மேற்குவங்கத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:00 IST)
தமிழகம் புதுவை கேரளா மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகம் புதுவை கேரளா அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து இன்று ஏழாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது 
 
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட மிகவும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளின்படி மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சியை பிடிப்பார் என்று கூறப்பட்டாலும் பாஜகவுக்கு 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் 8வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதன்பிறகு மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்