இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சகஜநிலை ஏற்படாத நிலையில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும், நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி நுழைவு தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு. சோனியா காந்தியுடனான ஆலோசனைக்கு பிறகு பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா மாநில அரசுகள் முடிவு எடுத்துள்ளது.