நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்கள் அஜித் பவார் அணிக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நாகலாந்தில் மொத்தமே ஏழு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக அஜித் பவார் பக்கம் அவர்கள் சென்றிருப்பது சரத் பவார் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.