சபரிமலையில் 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:17 IST)
சபரிமலையில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கு அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் சபரிமலையில் தற்போது பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டித்தாவளம் பகுதியில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல் கண்காணிப்பளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து சோதனை செய்ததில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், வெடி மருந்துகள் சபரிமலையில் நடக்கும் வழிபாட்டுக்கானது என்பது தெரிய வந்தது. சபரிமலையில் வெடி வழிபாடு ஏலம் எடுத்தவர் தினசரி 15 கிலோ மட்டுமே வெடி மருந்தை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
 
சபரிமலைக்கு செல்லும் வழியில் மலைப் பகுதியில் ஒரு கொட்டகை அமைத்து இந்த வெடி வழிபாடு நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் கூடுதல் வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்தது சட்டபடி குற்றமாகும். வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலே குப்பை எரிக்கும் இடக்கும் உள்ளது. இதனால் காவல்துறையினர் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்